‘சமூக ஒற்றுமைக்கு வர்த்தக தலைவர்கள் பங்காற்றலாம்’

சமூக ஒற்றுமையைக் கீழறுக்கும் மூன்று பிரச்சினைகளைச் சமாளிக்க  வர்த்தக தலைவர்கள் மேலும் முக்கிய பங்காற்றலாம் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.

உலகமயமாக்கலால் அதிகரித்து வரும் வேற்றுமை, தொழில் நுட்பங்களின் முன்னேற்றம், தலைமுறைகளுக்கு இடையே வளர்ந்து வரும் பிளவு, சமூக ஊடகங்களால் மோசமடைந்து வரும் அரசியல் மாறுபாடு ஆகியவற்றை அமைச்சர் ஹெங் சுட்டிக்காட்டினார்.

இதற்கு தீர்வு காணப்படவில்லையென்றால் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் சிரமத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரித்தார். வர்த்தக நிறுவனங்கள் சமூகப் பொறுப்புடன் இந்தப் பிரச்சினைகளைச் சமாளிக்க பெரும் பங்கு ஆற்றலாம் என்று அவர் சொன்னார். உலகளாவிய வர்த்தகப் போக்கு பற்றி விவாதிக்கும் சிங்கப்பூர் உச்சநிலை மாநாட்டில் திரு ஹெங் சுவீ கியட் பேசினார்.