சில மசேநி கணக்குகளுக்கு 2020 டிசம்பர் 31 வரை 4% வட்டி

1 mins read

மத்திய சேம நிதியின் சிறப்பு, மெடிசேவ், ஓய்வூதிய கணக்குகளுக்கு நான்கு விழுக்காடு வட்டி விகிதம் 2020ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் மத்திய சேம நிதிக் கழகமும் கூட்டாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன. இந்த நீட்டிப்புக்கு முன்பு இந்த நான்கு விழுக்காடு வட்டி இவ்வாண்டு 31ஆம் தேதி காலவதியாக விருந்தது.