விபத்தில் இளம் பெண் மரணம்

விபத்தில் இளம் பெண் மரணம்

1 mins read

சிலேத்தார் விரைவுச் சாலையில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் 27 வயது இளம்பெண் உயிரிழந்தார்.

சம்பவ இடத்திலேயே ேமாட்டார் சைக்கிள் ஓட்டி வந்த பெண் இறந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவ உதவியாளர்களும் குடிமைத் தற்காப்புப் படையினரும் தெரிவித்தனர். உட்லண்ட்ஸ் அவென்யூ 12க்கு வெளி யேறும் பாதைக்கு முன்பாக மத்திய விரைவுச் சாலைக்கு இட்டுச் செல்லும் சிலேத்தார் விரைவுச் சாலையில் அதிகாலை 2.15 மணி அளவில் விபத்து நிகழ்ந்தது. விபத்து நடந்த இடத்தைச் சுற்றி போலிசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். ஒரு லாரியும் ஒரு டிரக்கும் விபத்தில் சிக்கியதாக நம்பப்படுகிறது. சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.