செலவு 10% அதிகரிக்கலாம்

செலவு 10% அதிகரிக்கலாம்

1 mins read

சிங்கப்பூரின் நிறுவனங்கள் வழங்கும் மருத்துவ நலன்களுக்கான செலவுகள் பத்து விழுக்காடு அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய பசிபிக் வட்டாரத்தின் சராசரி 8.7 விழுக்காடு செலவுகளுடன் ஒப்பிடுகையில் இது அதிகம்.

பிரிட்டிஷ் காப்புறுதி நிறுவனமான 'ஏஆன்' மேற்கொண்ட 2020 உலகளாவிய மருத்துவப் போக்கு பற்றிய ஆய்வு மூலம் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.

ஆசிய பசிபிக் வட்டாரத்தில் மலேசியா(14%), தாய்லாந்து(13.9%) ஆகிய நாடுகளிலும் நிறுவனங்கள் வழங்கும் மருத்துவ நல உதவிகளுக்கான செலவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவிலும் ஹாங்காங்கிலும் முறையே 7.5 விழுக்காடு, 8.1 விழுக்காடு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

"மருத்துவப் பொருட்கள் மற்றும் சேவைகளின் செலவு இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகரித்துள்ளதும் நவீன தொழில்நுட்பத்தின் அறிமுகமும் மருத்துவ செலவுகள் உயர்வதற்கான காரணம்," என்று ஏஆன் காப்புறுதி நிறுவனம் தெரிவித்தது.

"காப்புறுதி தொகைகளுக்கு கைபேசி செயலிகள் வழியாக கோரிக்கை விடுப்பது எளிமையாக்கப்பட்டுள்ளது. இத்தகைய மருத்துவக் கோரிக்கைகளும் சீனாவில் நிறுவனங்களின் மருத்துவ செலவுகள் அதிகரிப்பதற்கு மற்றொரு காரணமாகும்.

மன உளைச்சல், சுவாச தொற்றுநோய் போன்றவை ஹாங்காங்கில் மருத்துவ போக்கு விகிதத்தைக் கூட்டியுள்ளது.