ஏமி கோர்: பொருளியலுக்கும் நன்மை பயக்கும் மறுசுழற்சி

மறுசுழற்சித் தொட்டிகளைச் சோதனையிடுதல், கண்ணாடி புட்டிகளைத் திருப்பிக் கொடுத்தால் முன்பணத்தைத் திரும்பப் பெறுதல் தொடர்பிலான கல்வி இயக்கங்கள் முதல் மோசமாகி வரும் சிங்கப்பூரின் உள்நாட்டு மறுசுழற்சி விகிதம் வரை நேற்றுக் காலை மறுசுழற்சி தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முழுவீச்சில் செயற்படுத்தப்பட்டன.

சுற்றுப்புற, நீர்வளத்துறை அமைச்சின் வளாகத்தில் நேற்று 48 பேர் குடிமக்கள் பணிக்குழுவாகப் பிரிந்து குடும்பங்களில் மறு

சுழற்சி பழக்கத்தை மேம்படுத்தும் வழிகளை ஆராய்ந்தனர்.

மறுசுழற்சி செயல்களில் அதிகம் ஈடுபடாதவர்கள் உட்பட சரியான மறுசுழற்சி பணிக்குழுவில் அங்கம் வகித்தனர்.

அக்குழுவின் பங்கேற்பாளர்களில் ஒருவரான 42 வயது விற்பனை நிர்வாகி திரு லியோன் ட்ராசில், “குடியிருப்பாளர்களை மையமாகக் கொண்ட ஊடக இயக்கம் குடும்பங்களில் மறுசுழற்சி செயல்களை மேம்படுத்தக்கூடும்,” என்று யோசனை தெரிவித்தார்.

“தற்போது மறுசுழற்சி தொடர்பி லான ஊடகச் செய்திகள் தெளிவாக இருப்பதில்லை. சரியான முறையில் மறுசுழற்சி செய்வது எப்படி என்று நிகழ்ச்சிகள் மூலம் வலியுறுத்தினால், இந்தச் செய்தி அவர்களைச் சென்றடையலாம்.

“மேலும் துண்டுப் பிரசுரங்கள், தகவல் அறிக்கைகள் போன்ற ்தொடர்பு முறைகளும் மக்களுக்கு இச்செய்தியைக் கொண்டு சேர்க்கும்,” என்றார்.

சிங்கப்பூரின் உள்நாட்டு மறுசுழற்சி விகிதம் அண்மைய ஆண்டு களில் மோசமாக இருந்து வந்துள்ளது. வட்டார அளவில் எடுத்துக்கொண்டால், சிங்கப்பூரின் மறுசுழற்சி விகிதம் சுமார் 20 விழுக் காடுதான்.

கடந்த ஆண்டில் மட்டும், இல்லவாசிகள் 2 மில்லியன் டன் குப்பைகளை வீசினர். அதில் 22 விழுக்காடு குப்பை மட்டும்தான் மறுசுழற்சி செய்யப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் மறுசுழற்சி செய்யப்படக்கூடிய பொருட்கள் பாழா கின்றன.

நீல நிற மறுசுழற்சித் தொட்டி களில் போடப்படும் பொருட்களில் 40 விழுக்காட்டு பொருட்கள் மறுசுழற்சி செய்ய முடியாத நிலையில் உள்ளன.

காரணம், அதில் போடப்படும் உணவு மற்றும் திரவப் பொருள் மறுசுழற்சி செய்யப்படக் கூடிய பொருட்களை பாழ்படுத்தி விடுகின்றன.

நேற்றைய நிகழ்ச்சியில் பங் கேற்றவர்கள், அவ்வாறு செய்வது மக்களின் அறியாமை என்றும் அவர்களின் சோம்பேறித்தனம் என்றும் கருத்துரைத்தனர்.

சுற்றுப்புற, நீர்வள அமைச்சின் மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மறுசுழற்சி என்பது சுற்றுப்புறத்துக்கு மட்டும் நன்மை பயப்பதில்லை. அது நாட்டின் பொருளியலுக்கும் நன்மை அளிக்கும்,” என்றார்.

“மின்னணுவியல் கழிவில் உள்ள பொருட்களை மறுபயனீடு செய்தால் அதன் மூலம் $40 மில்லியன் வரை நிகர லாபம் பெற முடியும் என்று ஆரம்பகட்ட ஆய்வு கள் தெரிவிக்கின்றன.

“மறுசுழற்சி செய்யும் முறையை நாம் மேம்படுத்தினால், வரையறுக்கப்பட்ட வளங்களை நாம் மீண்டும் பெறலாம். அது பொருளியலுக்கும் நன்மையளிக்கும்,” என்றார் அமைச் சர் ஏமி கோர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!