ஆஸ்திரேலியர் தெரிந்தே போத்தலை வீசியிருக்கிறார்

2 mins read
143c73a7-08c0-4534-b9db-e5c86565df6b
தான் செய்யும் செயலின் விளைவு தெரிந்தே குற்றம் புரிந்ததால் ஆண்ட்ரூ கோஸ்லிங்கின் குற்றச்சாட்டு கடுமையாக்கப் பட்டுள்ளது. படம்:ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஸ்போட்டிஸ்வூட் பார்க் கூட்டுரிமைக் கட்டடத்தின் உயர்மாடியிலிருந்து குப்பையைப் போட்டதால், 73 வயது முதியவரின் மரணத்துக்குக் காரணமானவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஆஸ்திரேலிய நாட்டவரின் குற்றச்சாட்டு கடுமையாக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் நேற்று முன்னிலையான 45 வயது ஆண்ட்ரூ கோஸ்லிங், ஏழாவது மாடியில் இருந்து தான் வீசும் கண்ணாடி ஒயின் போத்தல் ஐந்தாவது மாடியில் விழுந்து மற்றவர் மீது பட்டால் அது கடுமையான காயத்தை விளைவிக்கும் என்று தெரிந்தே அவ்வாறு செய்ததாகக் கூறினார். அதன்படி அவரது முன்னைய குற்றச்சாட்டு, ஒரு கருவியைக் கொண்டு, வேண்டுமென்றே கடுமையான காயம் விளைவித்தார் என்று மாற்றப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவ ருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் அபராதம் அல்லது பிரம்படியும் விதிக்கப்பட லாம்.

கவனக்குறைவான செயலால் ஒருவரின் மரணத்துக்குக் கார ணமானார் என்று கோஸ்லிங் மீது கடந்த மாதம் குற்றம் சாட் டப்பட்டது. அந்தக் குற்றத்துக்கு ஐந்து ஆண்டு சிறையும் அப ராதமும் விதிக்கப்படலாம்.

இக்குற்றத்தைக் கடந்த மாதம் 18ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு 'ஸ்போட்டிஸ்வூட் 18' கூட்டுரிமைக் கட்டடத்திலிருந்து கோஸ்லிங் புரிந்தார் என்று கூறப்படுகிறது.

மேலிருந்து வீசப்பட்ட போத்தல் கீழே நின்றுகொண்டிருந்த பொருள் விநியோக ஓட்டுநரான திரு நசியாரி சுனியின் தலையில் பட்டதால் அவரது மண்டையோடு உடைந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திரு நசியாரி அடுத்த நாள் மரணமுற்றார்.

சம்பவத்துக்குப் பிறகு அந்தக் கட்டடத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று போலிசார் விசாரித்தனர். கோஸ்லிங் கடந்த மாதம் 28ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கோஸ்லிங் அந்தக் கட்ட டத்தில் வசிப்பவரா என்பது நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்படவில்லை.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய திரு கோஸ் லிங்குக்கு நேற்று பிணை வழங்கப்படவில்லை. இந்த வழக்கு அடுத்த மாதம் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.