இரண்டு வெவ்வேறு சாலை விபத்துகளில் மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டிருந்த ஓர் ஆடவரும் ஒரு பெண்ணும் உயிரிழந்தனர்.
வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 19ஆம் தேதி) புவாங்கோங் டிரைவை நோக்கிச் செல்லும் காலாங்-பாயா லேபா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் சம்பவம் குறித்து போலிசாருக்கு மாலை 5.06 மணிக்குக் கிடைத்தது. சம்பந்தப்பட்ட 30 வயது ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக உறுதி செய்யப்பட்டார்.
இரண்டாவது சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த 27 வயது பெண் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவ உதவியாளர்களும் குடிமைத் தற்காப்புப் படையினரும் தெரிவித்தனர். உட்லண்ட்ஸ் அவென்யூ 12க்கு வெளியேறும் பாதைக்கு முன்பாக மத்திய விரைவுச் சாலைக்கு இட்டுச் செல்லும் சிலேத்தார் விரைவுச் சாலையில் அதிகாலை 2.15 மணி அளவில் விபத்து நிகழ்ந்தது. விபத்து நடந்த இடத்தைச் சுற்றி போலிசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். ஒரு லாரியும் ஒரு டிரக்கும் விபத்தில் சிக்கியதாக நம்பப்படுகிறது.
இரு சம்பவங்களையும் போலிசார் விசாரித்து வருகின்றனர்.

