நவம்பரில் மீண்டும் திறக்கும் எம்பிஹெச்

நவம்பரில் மீண்டும் திறக்கும் எம்பிஹெச்

1 mins read
a8b3ae9e-b869-42bf-a04c-0c0de55dd4d8
-

'எம்பிஹெச் புக்ஸ்டோர்ஸ்' புத்தகக் கடை மீண்டும் திறக்கவுள்ளது. பாயா லேபாரிலுள்ள சிங்போஸ்ட் சென்டரில் வரும் நவம்பர் மாதம் திறக்கவுள்ளது.

புத்தகங்களைத் தவிர, 1900 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ள அந்தக் கடையில் பென்சில், பேனாக்கள், அன்பளிப்புப் பொருட்கள், உணவு பானங்கள் உள்ளிட்டவை விற்கப்படும்.

இதற்கு முன்னதாக ராஃபிள்ஸ் சிட்டியில் இருந்த எம்பிஹெச் கடை ஜூலை மாதம் 28ஆம் தேதி மூடப்பட்டது. பார்க்வே பரேட்டில் இருந்த மற்றொரு கடை செப்டம்பர் 1ஆம் தேதி மூடப்பட்டது. அதிகமான வாடகையே இதற்குக் காரணம் என்று அந்தக் கடை தெரிவித்திருந்தது.

இவ்வாண்டிலேயே லியாங்கோர்ட்டில் கினோகுனியா, தாம்சன் பிளாஸாவில் பாப்புலர், சென்டர்பாயிண்டில் டைம்ஸ் ஆகிய புத்தகக் கடைகள் மூடின.