புகைமூட்டம் காரணமாக சிங்கப்பூருக்கும் ஈப்போவுக்கும் இடையிலான விமான சேவைகள் ரத்து

புகைமூட்டம் காரணமாக சிங்கப்பூருக்கும் ஈப்போவுக்கும் இடையிலான விமான சேவைகள் ரத்து

1 mins read
1a2bb627-1af9-4ea7-99c6-8288be143bee
-

புகைமூட்டம் காரணமாகச் சிங்கப்பூருக்கும் மலேசியாவின் ஈப்போ மாநிலத்திற்கும் இடையிலான பயணச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈப்போவின் சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்தில் திட்டமிடப்பட்டிருந்த 14 பயணங்களில் ஆறு பயணங்கள் ரத்து செய்யப்படவேண்டியிருந்தன.

ரத்து செய்யப்பட்ட அந்த விமானச் சேவைகள் ஏர்ஏஷியாவால் ஜோகூர் பாரு- ஈப்போ-சிங்கப்பூர் பாதைகள் வழியாக இரு திசைகளிலும் செல்பவை என்று பெர்னாமான கூறியது.

சிங்கப்பூரின் மலிவுச்சேவைக் கட்டண விமானமான ஃப்ளைஸ்கூட், சிங்கப்பூருக்கும் ஈப்போவுக்கும் இடையேயான சேவையையும் ரத்து செய்துள்ளது.