சுவா சூ காங்கில் மேலும் இரு உணவங்காடி நிலையங்கள்

சுவா சூ காங்கில் மேலும் இரு உணவங்காடி நிலையங்கள்

2 mins read
9753a82f-8345-4938-9036-b6716c575dbf
மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான அலெக்ஸ் யாம், அமைச்சர் லாரன்ஸ் வோங், ஓங் டெங் கூன், மார்சிலிங்-இயூ டீ அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் ஸாக்கி முகம்மது ஆகியோர் நேற்று இயூ டீ தொகுதியின் புதிய மேம்பாடுகளைப் பார்வையிட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சுவையான, அதே சமயத்தில் மலி வான உணவுக்காக ஏங்கும் சுவா சூ காங் குடியிருப்பாளர்கள் வரும் ஆண்டுகளில் தங்கள் வீட்டுக்கருகில் மேலும் இரு உணங்காடி நிலையங்களை எதிர்பார்க்கலாம்.

சுவா சூ காங் துணை நகரத்தில் தற்போது உணவங்காடி நிலை யம் இல்லை. அதற்கு மிக அருகிலான உணவங்காடி நிலையம் மூன்று கிலோ மீட்டருக்கு அப்பால் புக்கிட் பாஞ்சாங்கில் உள்ளது.

அந்த இரு உணவங்காடி நிலை யங்களில் ஒன்றைப் பற்றிய அறிவிப்பு 2015ஆம் ஆண்டில் சுற்றுப்புற, நீர்வள அமைச்சால் வெளியிடப் பட்டது.

புதிய பேட்டைகளில் அல்லது குறைவான பயன்பாடுள்ள உண வங்காடி நிலையங்கள் பற்றி அமைச்சின் விரிவான அறிவிப்பின் போது புதிய உணவங்காடி நிலை யங்கள் பற்றி தெரிவிக்கப்பட்டது.

சுவா சூ காங்கில் இடம்பெற இருக்கும் இரண்டாவது உணவங் காடி நிலையம் பற்றி நேற்று தேசிய சுற்றுப்புற வாரியம் அறிவித்தது.

நேற்று நடைபெற்ற இயூ டீ நகர தினத்தின்போது தேசிய வளர்ச்சி, மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, "சுவா சூ காங் துணை நகர மையத்தில் மற்றோர் உணவங்காடி நிலையம் கட்டப்படும். வரும் 2026ஆம் ஆண்டில் ஜூரோங் வட்டார ரயில் பாதையின் கட்டுமானப் பணிகள் முடிவுற்றதும் அந்த உணவங்காடி நிலையம் திறக்கப்படும்," என்று கூறினார்.

"பல பயன்பாட்டு வளாகத்தில் இந்தப் புதிய உணவங்காடி நிலை யம் அமைந்திருக்கும். இந்த வளா கத்தில் குடியிருப்பு, வர்த்தகம் அல்லது ஒருங்கிணந்த மேம்பாட்டின் இதர அம்சங்களும் கருத்தில் கொள்ளப்படும்," என்றும் மேலும் கூறினார் திரு ஸாக்கி.

கட்டி முடிக்கப்பட்ட அல்லது இன்னும் கட்டப்பட்டு வரும் 20 உணவங்காடி நிலையங்களில் இந்தப் புதிய நிலையங்களும் அடங்கும்.

இந்த 20 நிலையங்களில் ஏழு கட்டி முடிக்கப்பட்டு இப்போது செயல்பட்டு கொண்டிருக்கின்றன என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.

முன்னதாக அறிவிக்கப்பட்ட சுவா சூ காங் உணவங்காடி நிலை யம் புதிய இயூ டீ ஒருங்கிணைந்த மேம்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் இது 2026ஆம் ஆண்டு பிற்பகுதியில் தயாராகி விடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இயூ டீ தினத்தில் நேற்று 3,000 குடியிருப்பாளர்கள் துரிதநடை, புதிய மேம்பாடுகள் பற்றிய கண்காட்சி, கேளிக்கை விழா போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இயூ டீ தொகுதியில் 1996ஆம் ஆண்டு முதல் வசிக்கும் 58 வயது திரு ஆங் டெங் இயான், புதிய சமூக மன்றத்துடன் புதுப்பொலிவு பெறவிருக்கும் பகுதியை ஆவ லுடன் எதிர்பார்த்திருப்பதாகக் கூறி னார்.

"அதிக காலம் காலியாக உள்ள இந்த நிலம் மேம்பாட்டுத் திட்டத் தால் புத்துணர்ச்சி பெறும்," என்று திரு ஆங் மேலும் சொன்னார்.