'எம்பிஹெச் புக்ஸ்டோர்ஸ்' புத்தகக் கடை மீண்டும் தனது கதவுகளைத் திறக்கவுள்ளது. பாய லேபாரிலுள்ள சிங்போஸ்ட் சென்டரில் வரும் நவம்பர் மாதம் அது திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புத்தகங்களைத் தவிர, 1,900 சதுர அடி பரப்பளவைக் கொண்ட அந்தக் கடையில் எழுதுபொருட்கள், அனைத் துலக வாழ்க்கைபாணியிலான அன்பளிப்புகள், சிற்றுண் டிகள், பானங்கள் உள்ளிட்டவை விற்கப்படும். மேலும் அச்சடித்தல், கணினி வாடகை, பொருள் விநியோகம் ஆகிய சேவைகளும் அங்கு வழங்கப்படும்.
இதற்கு முன்னதாக ராஃபிள்ஸ் சிட்டியில் 6,500 சதுர அடி பரப்பளவு கொண்ட எம்பிஹெச் கடை ஜூலை மாதம் 28ஆம் தேதி மூடப்பட்டது. பார்க்வே பரேட்டில் இருந்த மற்றொரு கடை செப்டம்பர் 1ஆம் தேதி மூடப்பட்டது. அதிகமான வாடகையே இதற்குக் காரணம் என்று அந்தக் கடை தெரிவித்திருந்தது.
இவ்வாண்டில் லியாங்கோர்ட்டில் 'கினோகுனியா', தாம்சன் பிளாசாவில் 'பாப்புலர்', சென்டர்பாயிண்டில் 'டைம்ஸ்' ஆகிய புத்தகக் கடைகள் மூடப்பட்டன.

