அப்பர் தாம்சன் ரோட்டில் மான் ஒன்றை இடித்த மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். தாம்சன் ரோட்டை நோக்கிச் செல்லும் அப்பர் தாம்சன் ரோட்டில் நடந்த இந்த விபத்து குறித்து சனிக்கிழமை இரவு 9.23 மணிக்கு போலிசாருக்குத் தகவல் கிடைத்தது.
காயமடைந்த 25 வயது மோட்டார்சைக்கிளோட்டி சுயநினைவுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
சம்பந்தப்பட்ட மான் மீண்டும் காட்டுக்குள் புகுந்துவிட்டதால் அதற்கு என்ன ஆனது என்பதை போலிசாரால் உறுதி செய்ய இயலவில்லை.
இதே போல மான் ஒன்றை மோட்டார் சைக்கிள் ஒரு சம்பவம் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் மண்டாய் ரோட்டில் நடந்தது.

