கார் வாடகை மற்றும் பாலியல் சேவை மோசடிகளில் ஏழு பேரை ஏமாற்றியதாகக் கூறப்பட்டதன் தொடர்பில் சந்தேகப்பேர்வழிகள் மூவர் கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று போலிஸ் தெரிவித்து உள்ளது.
பாலியல் மோசடி வலையில் சிக்கி $200 தொகையைத் தான் வேறு ஒரு கணக்குக்கு மாற்றிவிட்டதாக ஆடவர் ஒருவர் மே 30ஆம் தேதி போலிசில் புகார் செய்தார்.
இதனிடையே, ஆகஸ்ட் 27ல் போலிசுக்கு கார் வாடகை மோசடி தொடர்பில் பலரும் புகார் தெரிவித்தனர்.
தொடர்ந்து பிடோக் போலிஸ் பிரிவு அதிகாரிகள் 18 முதல் 23 வரை வயதுள்ள அந்தச் சந்தேகப்பேர்வழிகளை அடையாளம் கண்டு அவர்களைக் கைது செய்தார்கள்.

