பொது வாடகை வீட்டுத் திட்டத்தின் கீழ் தனது அடுக்குமாடி வீடுகளை வாடகைக்குப் பெற விரும்பு வோருக்கான தகுதி நிபந்தனைகள் தொடர்பில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இப்போது மேலும் நீக்குப்போக்குடன் நடந்துகொள்கிறது.
அந்த நிபந்தனைகள் பற்றி கழகத்தின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் வருமான வரம்பு என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை.
பதிலாக, இப்போது வருமான வழிகாட்டி நெறிமுறை என்ற ஓர் அம்சம் அதில் இடம்பெற்று இருக்கிறது. ஒருவரின் மாத குடும்ப வருவாய் $1,500 அளவைத் தாண்டினாலும் கூட வாடகை வீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும் என்று அந்த வழிகாட்டி நெறிமுறை கூறுகிறது.

