இரண்டாவது நாளாக நேற்று நடந்த பாசிர் ரிஸ் விபத்தின் வழக்கு விசாரணையில், லாரி ஓட்டுநர் வேண்டுமென்றே வாகனத்தைத் தன் பக்கம் செலுத்தித் தன்னை இடித்ததாக மிதிவண்டி ஓட்டிய எரிக் சியூங் ஹோயூ, 35, நீதிமன்றத்தில் கூறினார்.
அத்துடன் லாரியை ஓட்டிய டியோ செங் தியோங், 58, கோபத்தில் தகாத சொற்களால் தன்னைத் திட்டியதாகவும் எரிக் சொன்னார்.
பெயர், தொடர்பு எண் என்று எந்தத் தகவல்களும் தராமல் டியோ அவ்விடத்தை விட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் இருவரும் சம்பந்தப்பட்ட காணொளி சென்ற டிசம்பர் மாதம் முதல் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

