அதிபர் ஹலிமா யாக்கோப்: சிறப்புத் தேவையுடையவர்களை மனதிற்கொண்டு வேலையிடங்களை வடிவமைக்கவும்

செயின்ட் ஆண்ட்ரூஸ் ஆட்டிசம் பள்ளியிலிருந்து இன்னும் இரண்டு ஆண்டுகளில் படித்து வெளியேற இருக்கும் 16 வயது ஷார்லின் லீ, நகை வடிவமைப்பாளராகவோ உணவுப் பானத் துறையில் ஓர் ஊழியராகவோ பணியாற்ற விரும்புகிறார்.

ஏழு வயது முதல் 18 வயது வரையுள்ள மிதமான அல்லது கடுமையான ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்காக அப்பள்ளியில் வழங்கப்படும் வாழ்க்கைத்தொழில் திறன் பயிற்சி மூலம் ஷார்லின், கைச்சங்கிலிகளையும் அட்டிகைகளையும் செய்ய கற்றுக் கொண்டுள்ளார்.

ஷார்லினுக்கு சில உணவுப் பண்டங்களைச் சமைக்கவும் தட்டு களைக் கழுவவும் தெரியும். நேற்று செயின்ட் ஆண்ட்ரூஸ் ஆட்டிசம் பள்ளிக்கு வருகை புரிந்த அதிபர் ஹலிமா யாக்கோப், சிறப்புத் தேவையுடையவர்களுக்காக தங்கள் வேலையிடங்களை மறு வடிவமைக்கும் முயற்சிகளை முதலாளிகள் எடுப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“வெவ்வேறு திறன்களைக் கொண்டவர்களுக்காக தங்கள் வேலையிடங்களை மறுவடிவமைக்க முதலாளிகளை ஊக்குவிக்கி

றோம். இதன் மூலம் வேலையிடத் தில் பணித்தடை ஏற்படாமலும் அதன் மூலம் கூடுதல் செலவு ஏற் படாமலும் பார்த்துக்கொள்ளலாம்.

“தொடக்கத்திலிருந்தே நீங்கள் வெவ்வேறு ஆற்றல்களுடையவர் களுக்காக வேலையிடத்தை மறு வடிவமைத்திருந்தால், சிறப்புத் தேவையுடைய மாணவர்கள் அங்கு வந்து நீக்குப்போக்குடன் வேலை செய்ய ஏதுவாக இருக்கும்,” என்று விவரித்தார்.

சிறப்புக் கல்வித் தேவைகளு டைய மாணவர்களுக்கு ஆதர வளிக்கும் ஒரு பள்ளிக்கு அதிபர் ஹலிமா இவ்வாண்டில் மேற் கொள்ளும் ஆறாவது வருகை இது என்பது குறிப்பிடத்தக்கது.

“இங்கு நாங்கள் மாணவர் களுக்கு வழங்கும் கல்வியும் பயிற் சியும் அவர்கள் சமூகத்தில் பணியாற்றுவதற்கும் பங்களிப்பதற் கும் உதவுகிறது. இத்தகைய பிள் ளைகளுக்கும் குரல், சொந்த குணாதிசயம், வலிமை, ஆர்வங்கள் ஆகியவை உண்டு என்பதை நாம் சமூகத்தில் உள்ளவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்,” என்றார் செயின்ட் ஆண்ட்ரூஸ் ஆட்டிசம் பள்ளியின் முதல்வர் டயானா சின்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!