'சிங்கப்பூரைப் பற்றி தவறாக எழுதுவதற்கே வெளிநாட்டினரை வேலைக்கு வைத்துள்ளது ஆன்லைன் சிட்டிசன்'

'சிங்கப்பூரைப் பற்றி தவறாக எழுதுவதற்கே வெளிநாட்டினரை வேலைக்கு வைத்துள்ளது ஆன்லைன் சிட்டிசன்'

2 mins read
a9f1fde1-96a6-46d0-9df6-9b2f2d93d1da
'வெளிநாட்டுத் தலையீட்டு உத்திகளும் எதிர்ப்பு நடவடிக்கைகளும்' என்ற தலைப்பிலான மாநாட்டில் உரையாற்றிய உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம்.  படம்: எஸ்டி, குவா சீ சியோங் -

சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் சிங்கப்பூரை பற்றி தவறாக எழுதுவதற்கே மலேசியா உட்பட வெளிநாட்டினரை வேலைக்கு வைத்துள்ளது ஆன்லைன் சிட்டிசன் இணையத்தளம் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.

சமூக ஒற்றுமையைக் குலைக்கும் வகையிலான கட்டுரைகள் அவற்றில் அடங்கும் என்றும் அமைச்சர் சண்முகம், நேற்று நடைபெற்ற 'வெளிநாட்டுத் தலையீட்டு உத்திகளும் எதிர்ப்பு நடவடிக்கைகளும்' என்ற தலைப்பிலான மாநாட்டில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.

கோலாலம்பூருக்கு அருகே ஷா அலாமில் வசிக்கும் ரூபாஷினி சண்முகநாதன் எனும் மலேசியர் எழுதிய இரு கட்டுரைகளை உதாரணம் காட்டினார் திரு சண்முகம்.

அவரது முதலாவது கட்டுரையில் அவர் ஹாங்காங் மக்களின் போராட்ட முறையை சிங்கப்பூர் அரசாங்க அதிகாரிகள் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எழுதியிருந்தார்.

அடுத்து அவர் பிரதமர் லீ சியன் லூங் பற்றி எழுதிய கட்டுரை அந்த இணையத்தளம் மீது பிரதமர் சிவில் வழக்கு தொடுப்பதற்குக் காரணமாக இருந்துள்ளது.

தமது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அந்தக் கட்டுரை இருந்ததால் வழக்கு தொடரப்பட்டது என்று பிரதமர் லீ கூறியிருந்தார்.

"அந்தக் கட்டுரை தொடர்பில் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் அது பற்றி நான் பேசவில்லை. மலேசியாவில் வாழும் ஒரு வெளி நாட்டவர் சிங்கப்பூரர்களுக்கான ஓர் இணையத்தளத்தில் சிங்கப்பூர் மக்களுக்காக கட்டுரை எழுதியி ருப்பது விந்தையாக இருக்கிறது.

"அவரை யார் கட்டுப்படுத்துவது, அவருக்குப் பணிக்கு யார் சம்பளம் கொடுப்பது, அப்படிப்பட்ட கட்டுரை எழுதுவதன் நோக்கம் என்ன, இவை எல்லாம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள். இந்தக் கட்டுரைகளைப் படிப்போர் இவற்றை சிங்கப்பூரரர்கள்தான் எழுதியிருக்கிறார்கள் என்று நினைப்பார்கள்," என்று விளக்கினார்.

"ஆன்லைன் சிட்டிசன் இணையத்தளத்தின் 14 நிர்வாகிகளில் ஐவர் மட்டுமே சிங்கப்பூரில் வசிக்கி றார்கள். ஒன்பது பேர் வெளிநாட் டில் இருக்கிறார்கள். அவர்களில் நால்வர் மலேசியர்கள், இருவர் இந்தோனீசியர்கள். அவர்கள் சிங்கப்பூரர்களா, வெளிநாட்டினரா, அவர்கள் எப்படிப்பட்டவர்கள் போன்ற விவரங்கள் நமக்குத் தெரியாது." என்று அமைச்சர் சண்முகம் விவரித்தார்.