வேலையிடத்தில் தொந்தரவு, பாரபட்சம் ஆகியவற்றால் பாதிக்கப்படுவோருக்கு ஆதரவளிக்க 'அவேர்' எனும் பெண்களுக்கான செயல் மற்றும் ஆய்வு அமைப்பு இலவச ஆலோசனை சேவையைத் தொடங்கியுள்ளது.
இந்தச் சேவை மூலம் வேலையிடத்தில் தொந்தரவு, பாரபட்சம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட, 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு செயல்முறை ஆலோசனையும் உணர்வுபூர்வமான ஆதரவும் அளிக்கப்படும். அவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்பவர் களாக இருக்க வேண்டும். எந்த இனமாகவும் இருக்கலாம் என்று அவேர் விளக்கியது.
பாதிக்கப்படுவோர் இந்த இலவச சேவையின் உதவி எண்ணை அழைத்து சிறப்பு ஆலோசகரைச் சந்திப்பதற்காக தேதியையும் நேரத்தையும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு சம்பவத்தைப் பொறுத்து ஆலோசகர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மனிதவளப் பிரிவையோ 'டஃபெப்' எனப்படும் நியாயமான, படிப்படியான வேலை நடைமுறைகளுக்கான முத்தரப்புப் பங்காளித்துவ அமைப்பையோ அல்லது சர்ச்சை தீர்வுக்கான முத்தரப்
புப் பங்காளித்துவ அமைப்பையோ தொடர்புகொள்வார்கள்.
தனிநபரின் தேவைகளைப் பொறுத்து ஆலோசனை சேவையும் இலவச சட்ட ஆலோசனை சேவை யும் வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சேவையை தொழிற்சங்க உறுப்பினர்களும் தொழிற்சங்க உறுப்பினர் அல்லாதவர்களும் பயன் படுத்திக்கொள்ளலாம்.
அவேர் அமைப்பின் சேவைகள் பொதுவாக பெண்களுக்காக வழங்கப்படுபவை என்றாலும், வேலையிடத்தில் துன்புறுத்தல், பாரபட்சம் ஆகியவற்றால் பாதிக் கப்பட்டு அவதியுறும் ஆண்களும் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அது கூறி யது.
"கடும் பாதிப்புக்குள்ளாகும் வரை காத்திருந்து பின்னர் எங் களை அணுக வேண்டியதில்லை. எது துன்புறுத்தல், எது பாரபட்சம் காட்டுதல் என்று உங்களுக்குச் சரி யாகப் புரியவில்லை என்றாலும் அது பற்றி எடுத்துரைக்க நாங்கள் இருக்கிறோம்," என்றார் அவேர் அமைப்பின் ஆய்வு, ஆலோசனை பிரிவின் தலைவர் ஷைலி ஹின் கோரனி.
ஆலோசனை சேவையில் கூறப் படும் தகவல்கள் அனைத்தும் மிக ரகசியமாக வைத்துக்கொள்ளப் படும் என்றும் இது குறித்து விளக்கமளிக்க பாதிக்கப்பட்டோ
ரின் முதலாளிகள் ஒருபோதும் அழைக்கப்பட மாட்டார்கள் என்றும் திருவாட்டி ஷைலி உறுதியளித் தார்.

