புகைமூட்டத்தை சற்று தணித்த மழை

புகைமூட்டத்தை சற்று தணித்த மழை

1 mins read
84559f5d-99ec-485b-99ba-da79b3fae489
கோப்புப்படம்: எஸ்டி -

கடந்த சில நாட்களாக புகைமூட்டத்தால் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்த காற்றுத் தரக் குறியீடு நேற்று பெய்த கனத்த மழையால் சற்று மேம்பட்டு காணப்பட்டது.

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி காற்றுத் தரக் குறியீடு 62க்கும் 67க்கும் இடைப்பட்டி ருந்தது. ஐந்து நாட்களில் நேற்றுதான் காற்றுத் தரக் குறியீடு 70க்குக் குறைவாக இருந்தது.

காற்றுத்தரக் குறியீடு 50க்கும் குறைவாக இருந்தால் நல்ல நிலை என்றும் 51லிருந்து 100க்கும் இடைப்பட்டிருந்தால் மிதமான நிலை என்றும் 101க்கும் 200க்கும் இடைப்பட்டிருந்தால் ஆரோக்கியமற்ற நிலை என்றும் கணக்கிடப்படு கிறது.

அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று தேசிய சுற்றுப்புற வாரியத்தின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால், காற்றுத்தரக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலைக் குச் செல்லாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"இந்த வட்டாரத்தில் மழை பெய்வதால், புகைமூட்டத்தின் நிலவரத்தில் சற்று முன்னேற் றம் தென்பட்டாலும் சுமத்ராவில் தொடர்ந்து எரியும் காட்டுத்தீ சம்பவத்தால் புகைமூட்டம் இன்னும் நீடிக்கும்," என்று வாரியத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.