லிட்டில் இந்தியாவில் சட்டவிரோத பணம் அனுப்பும் சேவை: விசாரணையில் எண்மர்

1 mins read
fbb370af-dcb4-4546-b03a-8181340b86bb
படம்: சிங்கப்பூர் போலிஸ் -

வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவுடன் போலி சார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கை யில் $47,000 ரொக்கம், கைபேசிகள், பணம் அனுப்பிய பரிவர்த்தனைக்கான ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக நேற்று முன்தினம் போலிசார் தெரிவித்தனர்.

கைதான 30 முதல் 54 வயதுக்குட்பட்ட எட்டு ஆடவரும் போலிஸ் விசாரணையில் தற்போது உதவி வருகின்றனர். உரிமம் இல்லாமல் நடத்தப்படும் பணம் அனுப்பும் வர்த்தகங்கள் பண மோசடி அல்லது பயங்கர வாதிகளுக்கு நிதி உதவி போன்றவற்றுக்குக் காரணமாக அமையக்கூடும் என போலிஸ் அறிக்கை தெரிவித்தது.

வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்ப விரும்புபவர்கள் உரிமம் பெற்ற பணம் அனுப்பும் முகவர்கள் அல்லது வங்கி களை நாடுமாறு அந்த அறிக்கை கேட்டுக்கொண்டது.

ஒருவர் உரிமம் இன்றி பணம் அனுப்பும் வர்த்தகம் புரிவதாக நிரூபிக்கப்பட்டால் அவருக்கு $100,000 வரை அபராதம், ஈராண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப் படலாம். குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகு அவர் தொடர்ந்து பணம் அனுப்பும் வர்த்தகம் செய்தால் அவர் அந்த வர்த்தகத்தைத் தொடர்ந்து நடத்தும் ஒவ்வொரு நாளுக்கும் தலா $10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.