முதலாளியிடமிருந்து $4 மில்லியன் கையாடல்; ஊழியருக்கு 9.5 ஆண்டு சிறை

முதலாளியிடமிருந்து $4 மில்லியன் கையாடல்; ஊழியருக்கு 9.5 ஆண்டு சிறை

1 mins read

நான்கு ஆண்டுகளாக தான் வேலை செய்யும் நிறுவனத்துக்கு அளிக்கப்படும் காசோலைகளைத் தனது சொந்த வங்கிக் கணக்கில் போட்டு, கிட்டத்தட்ட $4 மில்லியனை கையாடல் செய்த கணக்காளர் ஒருவருக்கு ஒன்பதரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கிளிக்டெக் சிங்கப்பூர் நிறுவனத்தில் அரியல் பியாசோங் சலமனெஸ் எனும் பிலிப்பீன்ஸ் நாட்டவர் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2017ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி வரை வேலை செய்தார். அந்தக் காலகட்டத்தில் அரியல் தனது நிறுவனத்தின் சார்பில் மொத்தம் 451 காசோலைகளைப் பொய்யாகி வழங்கி, பின்னர் அந்தப் பணத்தைத் தனது சொந்தக் கணக்கில் முதலில் போட்டு, பிறகு அதை எடுத்து பிலிப்பீன்சிலுள்ள தனது வங்கிக் கணக்குக்கும் தனது குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளுக்கும் மாற்றி விடுவார்.

"இது நன்கு திட்டமிட்ட மோசடிக் குற்றங்கள்," என்று கூறினார் மாவட்ட நீதிபதி ஓங் லுவான் சீ. ஒவ்வொரு குற்றத்துக்கும் அரியலுக்கு 15 ஆண்டுகள் வரை சிறையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.