'க்யூஆர்' குறியீடு மூலம் சுகாதாரக் கல்வி முறை

'க்யூஆர்' குறியீடு மூலம் சுகாதாரக் கல்வி முறை

2 mins read
460881c8-5b56-4eb9-907b-6aabd2acbca8
-

சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்களில் மருத்துவரைக் காண காத்திருக்கும் நோயாளிகள் சுகாதாரம் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள சுகாதாரக் கையேடுகளை நாட வேண்டியதில்லை. மாறாக, அங்கு வைக்கப்பட்டுள்ள சுவரொட்டிகளில் உள்ள 'க்யூஆர்' குறியீடுகளை 'ஸ்கேன்' செய்தாலே உங்களுக்குத் தேவையான தகவல்கள் உங்கள் திறன்பேசிகளிலும் தொழில்நுட்பச் சாதனங்களில் தோன்றும். அதை நீங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம். அடுத்த ஆண்டு முதல் சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்களில் அத்தகைய 'க்யூஆர்' குறியீடுகள் கொண்ட சுவரொட்டிகள் மாட்டப் படும் என்று சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்களின் உதவி தாதிமைத் துறை இயக்குநர் டான் அய் மெங் தெரிவித்தார்.

"தற்போது, தங்கள் சுகாதாரம் தொடர்பான விவரங்களைப் படித்து தெரிந்துகொள்ள நோயாளிகளுக் குச் சுகாதாரக் கையேடுகள் கொடுக்கப்படுகின்றன.

"இருப்பினும், இத்தகைய முறை மாற்றப்பட வேண்டியுள்ளது. மேலும் கையேடுகளில் அச்சடிக்கப்பட்டு உள்ள தகவல்கள் நாளடைவில் பழையதாகி விடுகிறது. மேலும் புதிய கையேடுகளில் ஆகக் கடைசித் தகவல்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். புதிய கையேடுகளை அச்சடிக்கும் செலவும் அதி கரிக்கிறது," என்று திருவாட்டி டான் விளக்கினார்.

சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்கள் ஆண்டு ஒன்றுக்கு 46,000க்கும் மேற்பட்ட சுகாதாரக் கையேடுகளை அச்சடிக்கின்றன.

"நமது சுகாதாரக் கல்வியை அவ்வப்போது மேம்படுத்தி வருவது நோயாளிகளுக்கு நல்ல பலனைத் தரும். அந்தத் தகவல்களை அவர் கள் எந்த இடத்திலும் எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.

"கையேடுகளை அச்சடிக்கும் செலவு குறைகிறது, காகிதக் கழிவு களும் குறைக்கப்படுகின்றன. கையேடுகளைத் தயாரிக்கும் பொறுப்பில் இருக்கும் தாதியர் இதர மருத்துவப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்," என்றும் திருவாட்டி டான் விவரித்தார்.

"இந்த 'க்யூஆர்' குறியீடு முறை கடந்த ஆண்டு இறுதியிலிருந்து சோதிக்கப்பட்டு வருகிறது.

"சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்களுக்கு வரும் நோயாளிகளுக்கு தாதியரும் மருந்தக ஊழியர்களும் சுகாதாரக் கையேடுகளைக் கொடுப்பதற்குப் பதிலாக, 'க்யூஆர்' குறியீட்டு முறையைப் பயன்படுத்தும் வழிகளையும் சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்களில் இணையத் தளத்துக்குச் செல்லும் முறையையும் கற்றுக்கொடுக்கிறார்கள். அடுத்த ஆண்டிலிருந்து பிடோக், பொங்கோல் பலதுறை மருந்தகங்களில் உட்புறச் சுவர் களில் 'க்யூஆர்' குறியீடு கொண்ட சுவரொட்டிகள் பொருத்தப்படும்.

இந்த முறை நாளடைவில் சிங்ஹெல்த் குழுமத்தின் மற்ற பலதுறை மருந்தகங்களுக்கு விரிவுப்படுத்தப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று திருவாட்டி டான் சொன்னார்.

இந்தப் புதிய தொழில்நுட்ப முறையின் மூலம் சிங்ஹெல்த் குழுமம் ஓராண்டுக்கு $10,000 வரை சேமிக்க இலக்கு கொண்டுள்ளது என்று குறிப்பிட்ட திருவாட்டி டான், திறன்பேசிகளை சரிவர பயன்படுத்தத் தெரியாத நோயாளிகள் பழைய முறையைப் பயன்படுத்த குறிப்பிட்ட எண்ணி்க்கையில் தங்கள் குழு மத்தின் பலதுறை மருந்தகங்களில் சுகாதாரக் கையேடுகள் ஆங் காங்கே வைக்கப்பட்டிருக்கும் என்றும் கூறினார்.