புக்கிட் பாத்தோக் பூங்கா ஏரியிலிருந்து மூதாட்டியை காப்பாற்றிய சுற்றுப்பயணிகள்

புக்கிட் பாத்தோக் பூங்கா ஏரியிலிருந்து மூதாட்டியை காப்பாற்றிய சுற்றுப்பயணிகள்

1 mins read
c5d41d63-ec0f-4e25-833d-348573b9cb9f
தங்கள் பிள்ளைகளைப் பார்க்க சிங்கப்பூருக்கு வந்த இரண்டு பிரிட்டிஷ் பயணிகள் கடந்த செவ்வாய்க்கிழமை புக்கிட் பாத்தோக் பூங்கா ஏரியிலிருந்து 72 வயது மூதாட்டி ஒருவரைக் காப்பாற்றினர்.  படம்: ‌ஷின்மின் -

தங்கள் பிள்ளைகளைப் பார்க்க சிங்கப்பூருக்கு வந்த இரண்டு பிரிட்டிஷ் பயணிகள் கடந்த செவ்வாய்க்கிழமை புக்கிட் பாத்தோக் பூங்கா ஏரியிலிருந்து 72 வயது மூதாட்டி ஒருவரைக் காப்பாற்றினர்.

உயிர்காப்பு மிதவை மற்றும் ஏணியைக் கொண்டு காப்பாற்றப்பட்ட மூதாட்டி, பின்னர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

புகைப்படக் கலைஞரான 65 வயது லெஸ்லி ப்ரேவின் தன் கணவருடன் ஏரிக்கு அருகில் நடந்து சென்றுக்கொண் டிருக்கும்போது, அங்கு ஒரு சுவருக்குப் பக்கத்தில் ஒரு சிறிய நாற்காலி இருந்ததைக் கண்டனர். ஏதோ நடந்து இருக்கிறது என்ற சந்தேகத்தின்பேரில் சுவருக்கு அடுத்துள்ள ஏரியைப் பார்த்தபோது அங்கு ஒருவர் தண்ணீரில் தத்த ளித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தனர்.

லெஸ்லியின் கணவர் மூதாட்டியை வெளியே கொண்டு வரும் வழியை யோசித்துக்கொண்டிருந்தபோது, மேலும் தாமதிக்கக்கூடாது என்று எண்ணிய முக்குளிப்பு பயிற்றுவிப்பாளரான லெஸ்லி உடனே நீருக்குள் குறித்து மூதாட்டியைக் காப்பாற்றினார். வெளியே கொண்டு வரப் பட்ட அவருக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் வரும்வரை வாய்வழி சுவாசம் கொடுக்கப்பட்டது.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த மாது, உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டார் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டார்.