தொழில்நுட்பத் தாக்கத்தால் எதிர்காலத்தில் தங்களது வேலை பாதிக்கப்படுமோ என்பது குறித்து சிங்கப்பூரர்கள் அதிகம் அஞ்சுவதாக கணக்கு தணிக்கை நிறுவனமான 'பிடபுள்யுசி' மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மொத்தம் 11 நாடுகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. பிரெஞ்சு மக்களுக்கு அடுத்ததாக பிரிட்டிஷ் மக்களும் சிங்கப்பூரர்களுமே தங்கள் வேலைக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து ஆக அதிகம் பயப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பத்தால் தங்களது வேலை எப்படி பாதிக்கப்படுமோ என்பது குறித்து ஐந்தில் இரு சிங்கப்பூரர்கள் கவலையுறுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டு காலத்தில் தொழில்நுட்ப மாற்றத்தால் தங்களின் பணி பயனற்றுப் போய்விடுமோ என்பது குறித்து பாதிக்கும் மேற்பட்டோர் அஞ்சுகின்றனர்.

