தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 133 சந்தேக போதைப் புழங்கிகளை போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சிங்கப்பூரர் ஒருவரிடமிருந்து 1.6 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
திங்கள் காலையிலிருந்து வெள்ளிக் கிழமை காலை வரை நடைபெற்ற சோதனையில் 187,000 வெள்ளி மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்று நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது. போலிசார் ஆதரவுடன் ஜூரோங், புவாங்காக், பாசிர் ரிஸ் உள்ளிட்ட வட்டாரங்களில் சோதனை நடத்தப்பட்டதாக அறிக்கை குறிப்பிட்டது.

