கடன் முதலைகளுக்கு சட்டவிரோதமாக இடைத் தரகராகச் செயல்பட்ட இரு பணிப் பெண்களுக்கு அபராதத்துடன் சிங்கப்பூருக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது.
மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்தது.
உரிமம் பெற்ற லேவாதேவிக்காரர்களிடமிருந்து கடன் பெற மற்ற பணிப்பெண்களுக்கு உதவி செய்து பிலிப்பீனோ நாட்டைச் சேர்ந்த ஜேனலின் மஸிராக் கன்னபன், 39, ஒபிலோ ஆர்லின் மனலே, 50 ஆகியோர் மாதந்தோறும் நூறு முதல் 400 வெள்ளி வரை வருமானத்தை ஈட்டி வந்தனர்.
இருவருக்கும் நேற்று முன்தினம் தண்டனை விதிக்கப்பட்டது. ஜேனுலினுக்கு 8,000 வெள்ளியும் ஒபிலோவுக்கு 5,000 வெள்ளியும் அபராதம் விதிக்கப்பட்டது. இருவரின் வொர்க் பர்மிட்டும் ரத்து செய்யப்பட்டு சிங்கப்பூரில் நுழையவும் தடை விதிக்கப்பட்டது.

