விமான பணிப்பெண்ணை மானபங்கப்படுத்தியவருக்கு 4 மாதச் சிறை

விமான பணிப்பெண்ணை மானபங்கப்படுத்தியவருக்கு 4 மாதச் சிறை

1 mins read
224da383-7993-4720-b2db-ce8c714b96cd
விஜயன் மதன்கோபால். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இந்தியாவின் கொச்சின் நகரிலிருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்ட ஸ்கூட் விமானத்தில் விமான பணிப்பெண்ணை மானபங்கப்படுத்திய பொறியாளருக்கு நேற்று நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தால் இந்திய நாட்டவரான 39 வயது விஜயன் மதன்கோபா லின் சிங்கப்பூர் வேலை பறிபோனது. கடந்த 2017 நவம்பர் 2ஆம் தேதி காலை 8.14 மணியளவில் விமானத்தில் பயணம் செய்த சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான அவர், குடிபோதையில் பணிப்பெண்ணின் பின்புறத்தையும் வலது தொடையையும் தொட்டு மானபங்கப்படுத்தினார்.