கல்வி அமைச்சர் சென்னை பயணம்

கல்வி அமைச்சர் சென்னை பயணம்

1 mins read

கல்வி அமைச்சர் ஓங் யி காங் சென்னையில் இம்மாதம் 30ஆம் தேதி நடைபெறும் 'Hackathon' பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவிருக்கிறார்.

இந்திய பிரதமர் மோடியின் யோசனையில் உருவான புத்தாக்க தீர்வுகளை காண உதவும் இந்த நிகழ்ச்சி கடந்த ஆண்டு சிங்கப்பூரில் தொடங்கி வைக்கப்பட்டது.

சென்னையில் இந்த நிகழ்ச்சிக்கு நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு துறையும் அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்வி மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இதில் பிரதமர் மோடியும் கலந்துகொள்ளவிருக்கிறார். இவ்வாண்டு நிகழ்ச்சியில் சிங்கப்பூர், இந்தியாவைச் சேர்ந்த 120 மாணவர்கள் பங்கேற் கின்றனர். இவர்கள் கல்வி, சுகாதார பராமரிப்பு, சுற்று சூழலுக்கு உகந்த எரிசக்தி ஆகிய துறைகளில் உள்ள சவால்களுக்கு புத்தாக்க தீர்வுகளை பகிர்ந்துகொள்ள விருக்கின்றனர். திரு ஓங் தமது சென்னை பயணத்தின் ஒரு பகுதியாக மாமல்லபுரமும் செல்கிறார்.