பிரதமர் லீக்கு எதிரான வலைப் பதிவாளரின் மனு தள்ளுபடி

பிரதமர் லீக்கு எதிரான வலைப் பதிவாளரின் மனு தள்ளுபடி

1 mins read

பிரதமர் லீ தொடுத்த அவதூறு வழக்குக்கு எதிராக வலைப் பதிவாளர் லியோங் சே ஹியான் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த ஆண்டு பிரதமர் லீக்கு எதிராக தற்காப்பு, எதிர்வழக்கை தாக்கல் செய்த லியோங், தமக்கு எதிரான பிரதமரின் அவதூறு வழக்கு நீதிமன்ற நடைமுறைகளை தவறாகப் பயன்படுத்துவதாகும் என்று வாதிட்டார்.

ஆனால் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், மேல்முறையீட்டு நீதிபதிகள் ஆண்ட்ரு பாங், ஜுடித் பிரகாஷ் ஆகியோரை உள்ளடக்கிய மேல் முறையீட்டு நீதிமன்றம் லியோங்கின் வழக்கை தள்ளுபடி செய்தது.

இருபதாயிரம் வெள்ளி செலவை செலுத்த வேண்டும் என்றும் லியோங்குக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலேசிய செய்தி இணையத் தளமான 'த கவரேஜ்' வெளியிட்ட ஒரு செய்தியின் தலைப்பை கட்டுரையின் இணையத் தொடர்புடன் ஃபேஸ்புக்கில் லியோங் பகிர்ந்துகொண்டார்.

இந்தக் கட்டுரையில் 1எம்டிபியின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க சிங்கப்பூர் வங்கிகள் உதவ பிரதமர் லீயுடன் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ரகசிய உடன்பாடு செய்திருந்ததாகத் தெரிவிக்கப் பட்டது. இதனால் லியோங்குக்கு எதிராக பிரதமர் லீ அவதூறு வழக்குத் தொடுத்திருந்தார்.