ஜோகூர் லிங்கியு நீர்த்தேக்கத்தில் நீரின் அளவு 50 விழுக்காட்டுக்கும் கீழ் குறைந்தது

ஜோகூர் லிங்கியு நீர்த்தேக்கத்தில் நீரின் அளவு 50 விழுக்காட்டுக்கும் கீழ் குறைந்தது

1 mins read
beabde2d-03f8-4d46-a59c-a97804d0e9cc
ஜோகூரில் உள்ள லிங்கியு நீர்த்தேக்கம். படம்: ஊடகம் -

ஜோகூரில் உள்ள லிங்கியு நீர்த்தேக்கத்தில் நீரின் அளவு 50 விழுக்காட்டுக்கும் கீழ் குறைந்து விட்டது. இதற்கு வறண்ட வானிலையே காரணம் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் கூறுகிறது.

இவ்வாண்டு தொடக்கத்தில் நீரின் அளவு 72 விழுக்காடு இருந் தது என்றும் இதுபோன்ற நிலை 2015ல் ஏற்பட்டது என்றும் 2016ல் வரலாறு காணாத அளவாக நீரின் அளவு 20 விழுக்காடானது என்றும் கழகம் சுட்டியது.

"1995ஆம் ஆண்டில் இந்த நீர்த்தேக்கத்தின் செயல்பாடுகள் தொடங்கியதிலிருந்து இதுவரை நீரின் அளவு 80-90 விழுக்காடு அளவை எட்டியதில்லை," என்றும் கழகம் கூறியது.

ஜோகூர் லிங்கியு நீர்த்தேக் கத்தை பொதுப் பயனீட்டுக் கழகம் $300 மில்லியன் செலவில் கட்டி

யது. நீ்ர்த்தேக்கத்தின் நீர் பெரும் பாலும் ஜோகூர் ஆற்றிலிருந்து பெறப்படுவதால், அதை தக்க வைத்துக்கொள்வதில் லிங்கியு மெதுவாகச் செயல்படுகிறது.

"மேலும் ஜோகூர் ஆற்றின் நீர்வரத்தின் எதிர்த் திசையில் மலேசியா அதன் நீர் ஆலை

களைக் கட்டியிருப்பதால், லிங்கி யுக்குள் வரும் நீர் வரத்து குறைந்துள்ளது," என்றும் கழகம் நேற்று தெரிவித்தது.

வறண்ட நிலை தொடர்வதால் நிலைமையைக் கட்டுப்படுத்த நீர்த்தேக்கத்திலிருந்து அதிகமான நீரை வெளியேற்றலாம் என்றும் கழகம் விளக்கியது.