வேலை-வாழ்க்கை நல்லிணக்கம்: முதலாவது குடிமக்கள் கூட்டம்

வேலை-வாழ்க்கை நல்லிணக்கம்: முதலாவது குடிமக்கள் கூட்டம்

2 mins read
e5e86c44-051f-44fc-bd1a-aa99ef96a58d
நேற்று மேக்ஸ்வேல் சேம்பர்ஸ் கட்டடத்தில் நடைபெற்ற வேலை-வாழ்க்கை நல்லிணக்கம் பற்றிய முதலாவது குடிமக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தக் கலந்துரையாடல் தொடருக்குத் தலைமையேற்கும் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ (நடுவில்) பங்கேற்பாளர்களிடம் பேசுகிறார். படம்: சாவ் பாவ் -

இன்றைய வேலையிடத்தில் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வேலைக்

கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் சேர்ந்து எடுக்க வேண்டிய ஒன்றிணைந்த முயற்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகத்தின் ஒவ்வொரு மனித ரும் முதலாளி, தொழிலாளர், சக ஊழியர், வாழ்க்கைத்துணை, பெற்றோர் என தனித்தனி நிலைப் பாடுகளில் சிந்தித்து தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

வேலை-வாழ்க்கை நல்லிணக்கம் பற்றிய முதலாவது குடிமக்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மேக்ஸ்வேல் சேம்பர்ஸ் கட்டடத்தில் நடைபெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 58 சிங்கப்பூரர்கள் திருமணம், பெற்றோராகுதல் தொடர்பான விவகா

ரங்கள் பற்றி விவாதிக்க தொடர் கலந்துரையாடல்களில் பங்கேற்பார்கள். இந்தக் கலந்துரையாடல்கள் தொடருக்கு மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தலைமை தாங்குகிறார்.

"வேலை-வாழ்க்கையில் நல் லிணக்கத்தைக் காண்பது உண் மையில் நமது வழக்கமாக சமூக செயல்பாடு. ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று சேர்ந்து இதன் இலக்கை நோக்கி செயல்பட்டால் அதன் முழுமையான பலனை அடையலாம்," என்றார் திருவாட்டி டியோ.

அமைச்சர் டியோவுடன் மனித வளம்; கல்வி ஆகியவற்றுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் லோ யென் லிங், கல்வி; சமுதாய குடும்ப மேம்பாடு ஆகியவற்றுக் கான மூத்த நாடாளுமன்றச் செய லாளர் முகம்மது ஃபைசல் இப்ரா ஹிம் ஆகியோரும் கலந்துரையா டலில் கலந்துகொண்டனர்.

அக்டோபர் 12, 26, நவம்பர் 9 ஆகிய தேதிகளில் அடுத்த மூன்று சந்திப்புகள் நடைபெறும். அப்போது பங்கேற்பாளர்கள் ஒரு நாள் பேசி கருத்துகளைத் தெரி விப்பார்கள்.

அதன் பிறகு திரட்டப்படும் பரிந்துரைகள் அரசாங்கம், சமூகக் குழுக்கள் மற்றும் இதர பங்காளித்துவ அமைப்புகள் ஆகியவற்றிடம் சமர்ப்பிக்கப்படும்.

அதனை அரசாங்கம் பரிசீ லித்து அதன் முடிவை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தெரி விக்கும்.