ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ரயில் திட்ட முடிவு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ரயில் திட்ட முடிவு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

2 mins read

ஜோகூர் பாருவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான 4 பில்லியன் ரிங்கிட் (S$1.3 பில்லியன்) மதிப்பிலான எம்ஆர்டி ரயில் திட்டம் தொடங்கும் தேதி குறித்து மலேசியா தனது முடிவைத் தெரிவிக்கும் காலக்கெடு நாளை முடிவடைகிறது.

தனது முடிவைத் தெரிவிக்கும் காலக்கெடுவை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க மலேசியா விடுத்த கோரிக்கையை சிங்கப்பூர் ஏற்றுக்கொண்டுள்ளது.

காலக்கெடு ஒத்திவைப்பு தொடர்பான கோரிக்கை அண்மையில் இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது விடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாகக் கொடுக்கப்பட்ட ஆறு மாதக் காலக்கெடு நாளை யுடன் முடிவடைகிறது.

மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக், சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானை அண்மையில் கோலாலம்பூருக்கு அடுத்துள்ள செப்பாங் நகரில் சந்தித்து பேசு கையில் காலக்கெடுவை மேலும் ஒரு மாதத்துக்கு ஒத்திவைக்கு

மாறு கேட்டுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலேசியாவின் கோரிக்கையை சிங்கப்பூர் ஏற்றுக்கொண்டது குறித்து நேற்று முன்தினம் மலே சியாவிடம் தெரிவிக்கப்பட்டது என் றும் அறியப்படுகிறது.

காலக்கெடு நீட்டிப்பு மலேசி யாவுக்கு எவ்வித நிதி தாக்கத்தை யும் ஏற்படுத்தாது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

"இதை அடுத்து மேலும் காலக் கெடு நீட்டிப்பு குறித்து மலேசியா கோரிக்கை விடுத்தால், அதன் ்தொடர்பில் மலேசியாவிடமிருந்து இழப்பீடு கோர சிங்கப்பூருக்கு உரிமை உண்டு," என்றும் அந்தத் தகவல்கள் மேலும் கூறின.

இந்தக் காலக்கெடு நீட்டிப்பை மலேசிய மத்திய அரசாங்கம் கோருவதற்கு ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் அக்மால் நாசிர்தான் காரணம் என்று கூறப் படுகிறது.

இத்திட்டத்தால் எதிர்காலத்தில் ஏதாவது நிதி நெருக்கடி அபாயங் கள் ஏற்படும் சாத்தியம் உள்ளதா என்பதை ஆராய இந்தக் காலக் கெடு நீட்டிப்பு உதவும் என்று தாம் கேட்டுக்கொண்டதாக திரு அக்மால் தெரிவித்தார்.

இந்த ஒரு மாதத்தில் நாட்டின் கடன் பிரச்சினைக்கு இந்த ரயில் திட்டம் மேலும் நிதிச் சுமையை அளிக்குமா என்று ஆராயப்படும் என்றும் திரு அக்மால் கூறினார்.

"என்னைப் பொறுத்தவரை, மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இந்த ரயில் திட்டம் அவசியம் தேவை. ஜோகூர் பாலத்தில் இரு திசைகளிலும் நாள்தோறும் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை இத்திட்டம் கணிசமாகக் குறைக்கும்," என்றும் திரு அக்மால் சொன்னார்.