பிரதமர்: கடும் சவால்களுக்கு தயாராக வேண்டும்

பிரதமர்: கடும் சவால்களுக்கு தயாராக வேண்டும்

2 mins read
c2273656-4a68-4208-9434-734b4d5485de
நியூயார்க்கிலுள்ள ஐக்கிய நாட்டுக் கான சிங்கப்பூ ரின் நிரந்தரத் தூதரகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் லீ சியன் லூங் அங்கு வந்த சிங்கப்பூரர்களு டன் கைகுலுக்கி உரையாடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பதற்றத் துக்கு விரைவான தீர்வு கிடைக் காது என்பதால் சில காலத்துக்கு கடும் சவால்களை எதிர்கொள்ள சிங்கப்பூரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பேராளர் குழுவுக்குத் தலைமையேற்று, ஐக்கிய நாட்டுப் பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க்குக்கு ஒரு வாரப் பயணம் மேற்கொண்டிருந்த திரு லீ, அங்கு பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசி னார்.

பயணத்தின் இறுதியில் சிங்கப் பூர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், "தங்களுக்கிடையிலான வர்த்தகப் போரை அமெரிக்காவும் சீனாவும் முடித்துக்கொள்ளும் என்று இப்போதைக்கு எதிர்பார்க்க முடியாது.

"இந்த நிலையற்றதன்மை

யால் உலகம் முழுவதும் முதலீடு, வர்த்தக நம்பிக்கை, பயனீட்டாளர் செலவு ஆகியவற்றைப் பாதித்து உள்ளது.

"நமது மொத்த உள்நாட்டு உற் பத்தி குறைந்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். பொருளியல் வளர்ச்சி தென்படும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். ஆனாலும் அது ஒரு விழுக்காட்டு வளர்ச்சியாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்றார்.

சிங்கப்பூருக்கான பொருளியல் வளர்ச்சி இந்த ஆண்டு பூஜ்யத் திலிருந்து ஒரு விழுக்காடு வரை இருக்கும் என்று அதிகாரபூர்வ வளர்ச்சி முன்னுரைப்பு அறிக்கை கடந்த மாதம் கூறியது.

"சிங்கப்பூரின் பொருளியல் இந்த ஆண்டு முற்பகுதியில் 0.6% வளர்ச்சி கண்டது. அடுத்த பத்து ஆண்டுகளுக்கான வளர்ச்சி முன்னைய ஆண்டுகளைவிட அதிக சிக்கலானதாக இருக்கும்.

"தங்களைச் சுற்றி என்ன பிரச் சினைகள் நடக்கிறது என்பதையும் அதனால் தங்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் சிங்கப்பூரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்," என்றும் பிரதமர் வலி யுறித்தினார்.

"உலகில் உள்ள மற்ற நாடுகளு டன் ஒப்பிட்டுப் பார்க்கையில், எதிர்கால சவால்களைச் சமாளிக்க சிங்கப்பூர் நல்ல தயார்நிலையில் இருக்கிறது.

"நாம் மேலும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் இருக்கிறோம். நம்மிடம் அதிகமான வளங்கள் உண்டு. தொடர்ந்து போட்டித் தன்மையுடன் சிறந்து விளங்கவும் நமது மக்களுக்கு நல்ல பயிற்சி யளித்து வருகிறோம்," என்றும் பிரதமர் லீ விவரித்தார்.