'பருவநிலை மாற்றம்: நாட்டுத் தலைவர்களுக்குப் பெரும் பொறுப்பு உண்டு'

'பருவநிலை மாற்றம்: நாட்டுத் தலைவர்களுக்குப் பெரும் பொறுப்பு உண்டு'

3 mins read
f8c1dc48-30df-4272-a13a-887ccc25ff03
பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரங்களில் நாட்டுத் தலைவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என்றும் அது அவர்கள் அடுத்த தலைமுறைக்குச் செய்யும் பேருதவி என்றும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். படம்: எஸ்டி -

பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரங்களில் நாட்டுத் தலைவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என்றும் அது அவர்கள் அடுத்த தலைமுறைக்குச் செய்யும் பேருதவி என்றும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

"இது இப்போது இளையர்களை ஆக்கிரமித்துள்ள பெரும் கவலை. அது அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடும்," என்று திரு லீ நேற்று முன்தினம் ஐக்கிய நாட்டுப் பொதுச் சபை கூட்டத்தில் பேசிய போது கூறினார்.

உலகின் 193 நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி உலகில் நிலவும் முக்கிய பிரச்சினைகள் பற்றி பேசும் கூட்டத்தில் பிரதமர் லீயுடன், பிரஞ்சு அதிபர் இமானுவல் மெக் ரோன், கென்ய அதிபர் உஹுரு கென்யாட்டா ஆகியோர் பருவநிலை மாற்றம் குறித்து உரை யாற்றினர்.

"பருவநிலை மாற்றம், வறு மையை ஒழித்துக்கட்டுதல் ஆகிய சிக்கலான பிரச்சினைகளைத் தனி ஒரு நாடாக தீர்த்து வைக்க முடி யாது. அதற்கு ஐ.நா. அமைப்பின் உறுப்பு நாடுகள் ஒன்றுசேர்ந்து பலதரப்பு அணுகுமுறைக்கு வலுவான ஆதரவளிக்க வேண்டும்.

"சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட பலதரப்பு முறையினால் தான் அமைதியையும் வளப்பத்தை யும் கட்டிக்காத்து, உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்," என்றும் திரு லீ வலியுறுத் தினார்.

அப்படிப்பட்ட சவால்களில் ஒன்றுதான் பருவநிலை மாற்றம் என்று கூறிய பிரதமர், கடந்த வாரம் உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்

கான இளையர்கள் திரண்டு அமைதிப் போராட்டம் நடத்தியதைச் சுட்டினார்.

சிங்கப்பூரில் உள்ள ஹோங் லிம் பூங்காவிலும் இளையர்களுடன் பெரியவர்களும் திரண்டு, உலகம் வெப்பமயமாதலுக்கும் கடல்நீர் பெருகுவதற்கும் எதிராக அரசாங் கங்கள் போதிய வேகத்தில் செயல் படவில்லை என்று குரல் கொடுத் தனர்.

"அவர்களுக்கு ஆதரவாக நாம் செயல்பட வேண்டியது நமது கடமை. அது நமது பொறுப்பு. அடுத்த தலைமுறையினருக்காக ஒரு சிறந்த பூமியை உருவாக்கித் தருவது நமது பெருங்கடமை.

"பருவநிலை மாற்றத்தின் தொடர்பில் சிங்கப்பூரில் குறிப்பிடத் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று கரி மத்தைக் குறைத்தல்.

"தென்கிழக்காசியாவிலேயே சிங்கப்பூரில்தான் கரிம வரி வசூ லிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையை மற்ற தென்கிழக்காசிய நாடுகளும் கடைப்பிடிக்க, சிங்கப்பூர் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க ஐ.நா. அமைப்புடன் பணியாற்றி வருகிறது," என்றும் பிரதமர் லீ தெரி வித்தார்.

"மிக முக்கியமாக, நாங்கள் எங்கள் மக்களின் மனதில் சுற்றுப் புறத்துக்கு ஏற்றவாறு நிலையான, நல்லிணக்கத்துடன் கூடிய வாழ்க் கையை வாழ்வதற்கு வலியுறுத்தி வருகிறோம்.

"தொழில்துறைக்கு முன்னைய உலக வெப்பமயமாதல் நிலையை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்புக்கு உட்பட்டு வைத்திருக்க சிங்கப்பூர் தன்னால் ஆன அனைத்து முயற்சி களையும் செய்யும்.

"அதில் முக்கியமாக, பேரழிவை ஏற்படுத்தக்கூடிய பருவநிலை மாற் றத்துக்கான வரம்புக்குக் குறை வான நிலையைக் கட்டிக்காப்பதா

கும். ஆனால், இந்த இலக்கை அடைவது அவ்வளவு எளிதல்ல.

"ஒருவேளை அந்த இலக்கை நாம் அடைந்தாலும், பிரச்சினை முழுமையாகத் தீர்ந்துவிடாது. அது கடல்நீர் மட்டம் உயர்வதை சிறிது மட்டுப்படுத்துமே தவிர, அதை நிறுத்திவிட முடியாது.

"ஆனால் இதை ஒரு சாக்காக எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு எல்லா நாடுகளும் தங்கள் முயற்சியைத் தொடர்ந்துகொண் டிருந்தால் பருவநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தும் வாய்ப்பு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்றும் பிரதமர் லீ தமது உரையில் எடுத்துரைத்தார்.