'ஆர்டிஎஸ்' காலக்கெடுவின் நீட்டிப்பு; கேள்வி எழுப்பும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

'ஆர்டிஎஸ்' காலக்கெடுவின் நீட்டிப்பு; கேள்வி எழுப்பும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

1 mins read
6893fb18-ce62-473a-bf95-bf98289de0fc
-

சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் 'ஆர்டிஎஸ்' ரயில் சேவை குறித்து மலேசியா முடிவெடுப்பதற்கான காலக்கெடு ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது குறித்து மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நான்கு மில்லியன் ரிங்கிட் ( 1.3 பில்லியன் வெள்ளி) மதிப்பிலான அந்தத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய மலேசியாவுக்கு ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருந்த ஆறு மாதக் காலக்கெடு நாளை காலாவதியாக வேண்டியிருந்தது.

இந்தக் காலக்கெடுவை நீட்டிக்க மலேசியா வேண்டுகோள் விடுத்ததை அடுத்து சிங்கப்பூர் அதனை அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டித்தது.

இந்த ரயில் சேவையைக் கட்டியமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கடந்தாண்டு கையெழுத்திட்டன.