பொங்கோல் வட்டாரத்திலுள்ள 'வாட்டர்வே பாயிண்ட்' கடைத்தொகுதியில் தரைத்தளத்திலுள்ள மின்படிக்கட்டுகளில் சில கழன்றது குறித்து விசாரிக்கவுள்ளதாக கடைத்தொகுதி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை காலை 11.45 மணிக்கு நிகழ்ந்ததாக கடைத்தொகுதி பேச்சாளர் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழிடம் மறுநாள் தெரிவித்தார். விபத்தின்போது எவரும் காயமடையவில்லை. பாதிக்கப்பட்ட இடத்தைச் சுற்றி தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன.

