அடுத்த மூன்று மாதங்களுக்கான மின்சாரக் கட்டணம் குறையும்

அடுத்த மூன்று மாதங்களுக்கான மின்சாரக் கட்டணம் குறையும்

1 mins read
3a6cb721-486e-4a34-8c2b-9e431d259e8d
-

வீடுகளுக்கும் வர்த்தகங்களுக்குமான மின்சாரக் கட்டணம் அடுத்த மூன்று மாதங்களுக்குக் குறையும் என எதிர்பார்க்கலாம். அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான மின்சாரக் கட்டணம், கடந்த காலாண்டுடன் ஒப்புநோக்க சராசரியாக 3.3 விழுக்காடு குறையும் (அதாவது 0.79 காசுகள்) என எஸ்பி குழுமம் தெரிவித்துள்ளது.

மின்சார உற்பத்திக்கான இயற்கை எரிவாயுவின் செலவு முன்னைய காலாண்டைக் காட்டிலும் குறைந்திருப்பது இதற்குக் காரணம் என்றது எஸ்பி குழுமம். அடுத்த மூன்று மாதங்களுக்கு, பொருள் சேவை வரிக்கு முந்திய மின்சாரக் கட்டணம் ஒரு கிலோவாட் மணிநேரத்திற்கு 24.22 காசுகள் என்ற கட்டணத்திலிருந்து 23.43 காசுகளுக்குக் குறைந்தது.

இவ்வாண்டு ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான கட்டணம் ஒரு கிலோவாட் மணிநேரத்திற்கு 24.22 காசு. இதுவே ஐந்து ஆண்டுகளில் ஆக அதிகமானது.

எரிபொருள் சந்தை ஆணையம் அமைத்துள்ள வழிமுறைகளின் அடிப்படையில் எஸ்பி குழுமம் மின்சாரக் கட்டணத்தைக் காலாண்டுதோறும் மறுஆய்வு செய்கிறது.