பணிப்பெண்ணைத் துன்புறுத்திய வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட மாது மேல்முறையீடு செய்துள்ளார்.
குற்றச்செயல் நடந்தபோது தமக்கு அந்தக் குற்றச் செயலைத் செய்யத் தூண்டியதாக ஒரு குரல் கேட்டதாக 51 வயது அனிதா தாமு கூறுகிறார்.
இதனால் அவருக்கு ஏற்பட்ட மாயத் தோற்றம் உண்மையானதா என்பது பற்றி மேல் முறையீட்டு வழக்கில் மதிப்பிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணிப்பெண் மீது வெந்நீரை ஊற்றியதாகவும் சூடான ஸ்திரி பெட்டியை பயன்படுத்தி காயப்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் கீழ் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள், ஏழு மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தது. இந்த நிலையில் நேற்று மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் அனிதா தாமு நேரில் சாட்சியளிப்பார் என கூறப்பட்டது.

