பாடப் பிரிவு ரத்து: யேல் பல்கலைத் தலைவர் விளக்கம்

பாடப் பிரிவு ரத்து: யேல் பல்கலைத் தலைவர் விளக்கம்

1 mins read

யேல்-என்யுஎஸ் கல்லூரியில் அதிருப்தி பற்றிய ஒரு பாடப்பிரிவை ரத்து செய்ய இந்த மாதத் தொடக்கத்தில் முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவை கல்லூரியே செய்தது.

கல்லூரியின் பாடத்திட்ட சுதந்திரத்தில் அரசாங்கத் தலையீடு எதுவுமின்றி அந்த முடிவை அந்தக் கல்லூரியே எடுத்ததாக யேல் பல்கலைக்கழகத் தலைவர் பீட்டர் சலோவே தெரிவித்து இருக்கிறார்.

'கலந்துரையாடலும் அதிருப்தியும்' என்ற தலைப்பிலான அந்தப் பாடப்பிரிவு, உள்ளூர் கவிஞரும் நாடக ஆசிரியரும் சிறுகதை ஆசிரியருமான ஆல்ஃபியன் சாட் தலைமையில் இடம்பெற இருந்தது.

அந்தக் கல்லூரியில் எல்லை கடந்து கற்றல் என்ற ஒரு கல்விச் செயல்திட்டத்தின் ஓர் அங்கமாக அந்தப் பாடப்பிரிவு செப்டம்பரிலும் அக்டோபர் தொடக்கத்திலும் இடம்பெற இருந்தது. ஆனால் அது தொடங்குவதற்கு சுமார் இரண்டு வாரங்கள் முன்னதாக செப்டம்பர் 13ஆம் தேதியே அது ரத்தாகிவிட்டது.