சுடச் சுடச் செய்திகள்

அடகுக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற வெளிநாட்டு ஊழியருக்கு சிறை, 18 பிரம்படிகள்

 

வெட்டுக்கத்தி, போலித் துப்பாக்கி, போலி வெடிகுண்டுப் பட்டை போன்றவற்றுடன் பூன் லேயில் உள்ள ‘வேல்யூமேக்ஸ்’ அடகுக்கடைக்குள் கொள்ளையடிக்கப் புகுந்த வெளிநாட்டு ஊழியருக்கு மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனையும், 18 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதி இந்தக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பங்ளாதேஷைச் சேர்ந்த 30 வயது ஷேக் முகமது ரஸான், அனுமதிக்கப்பட்ட காலத்தைவிட 200 நாட்களுக்கு மேலாக சிங்கப்பூரில் தங்கியிருந்ததையும், போலி வேலை அனுமதிச் சீட்டை வைத்திருந்ததையும் ஒப்புக்கொண்டார். மற்றொரு போலி வேலை அனுமதிச் சீட்டுடன் அவர் இங்கு வேலை தேடியதாகவும் கூறப்பட்டது.
 

சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் அந்தக் கடையில் $72,000 வரை ரொக்கமும் $15 மில்லியன் மதிப்பிலான நகைகளும் இருந்தபோதும், அந்தக் கடையின் ஊழியர்கள் ரஸானின் மிரட்டலுக்குப் பணியவில்லை.
 

கொள்ளையடிக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட ரஸான் அந்த இடத்திலிருந்து தப்பியோட வேண்டியதாயிற்று. தனது போலி வெடிகுண்டுப் பட்டையை அங்கேயே விட்டுவிட்டு ஓடிய ரஸான், போலிசார் நடத்திய தேடலில் ஐந்து நாட்களுக்குப் பிறகு சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
 

அதனையடுத்து வெடிகுண்டு, வெடிமருந்துப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சோதித்தனர். அந்த வெடிகுண்டுப் பட்டையில் வெடிமருந்து இல்லை என்று நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
 

தன்னுடைய முகத்தை மறைக்கவும் ஏமாற்றும் முயற்சியாகவும் சீக்கியர்கள் அணியும் தலைப்பாகையை ரஸான் அணிந்திருந்ததை அரசுத் தரப்பு வழக்கறிஞர் கிரேஸ் சுவா சுட்டிக்காட்டினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon