இவ்வாண்டில் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் மூன்றாம் காலாண்டில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகளின் விலை 0.1 விழுக்காடு உயர்ந்துள்ளதாக வீசமைப்பு வளர்ச்சிக் கழகம் நேற்று தெரிவித்தது.
மூன்றாம் காலாண்டில் மறுவிற்பனை விலைக் குறியீடு 130.9ஆக பதிவாகியது.
தொடர்ச்சியாக நான்கு காலாண்டுகளில் குறைந்து வந்ததை அடுத்து வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை அதிகரித்திருப்பது இதுவே முதல்முறை.
இதுகுறித்து விவரமான பொது வீடமைப்புத் தரவுகள் இம்மாதம் 25ஆம் தேதியன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அடுத்த மாதம் அங் மோ கியோ, தெம்பனிஸ், தெங்கா ஆகிய வட்டாரங்களில் 4,500 பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்படும் என்று வீவக கூறியுள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் செம்பவாங்கிலும் தோ பாயோவிலும் ஏறத்தாழ 3,000 பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்படும்.

