(காணொளி): ஊழியர் கைகலப்பு 'சிங்கப்பூரில் நடக்கவில்லை': போலிசார்

(காணொளி): ஊழியர் கைகலப்பு 'சிங்கப்பூரில் நடக்கவில்லை': போலிசார்

1 mins read
5285b32d-362a-48ef-a3bf-910905f20b53
-

ஊழியர்கள் கைகலப்பில் ஈடுபட்டதைக் காட்டும் காணொளி வாட்சப் வழியாக விரைவாகப் பரவியதைத் தொடர்ந்து, அந்தச் சம்பவம் சிங்கப்பூரில் நடக்கவே இல்லை என்று போலிசார் தெரிவித்துள்ளனர். ஊழியர்களுக்கான சிற்றுண்டிச்சாலையில் இந்தக் கைகலப்பு நேர்ந்ததாகத் தெரிகிறது. ஆரஞ்சு நிறச் சீருடையையும் ஆரஞ்சு அல்லது நீல நிறத் தொப்பிகளையும் அணிந்திருந்த சில ஊழியர்கள் நாற்காலிகளை ஒருவர் மீது ஒருவர் தூக்கி எறிவதையும் அடித்துக் குத்துவதையும் அந்த ஒரு நிமிடக் காணொளி காட்டுகிறது.

இந்தக் கைகலப்பு சிங்கப்பூரில் நிகழவில்லை என்று ஃபேஸ்புக் வழி தெரிவித்த போலிசார், பொய்ச்செய்திகள் வழி மற்றவர்களுக்குத் தேவையற்ற பீதியைக் கிளப்ப வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். இப்படிப்பட்ட ஒரு கைகலப்பின் தொடர்பில் தங்களிடம் எந்தப் புகாரும் செய்யப்படவில்லை என்று தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தெரிவித்தது.

இந்தக் காணொளி எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்படவில்லை.