யேல்-என்யுஎஸ் கல்லுரி வளாகத்தில் சக மாணவிகளை ஆபாச முறையில் காணொளி எடுத்ததன் தொடர்பில் மாணவர் ஒருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
பெண்கள் குளித்துக்கொண்டிருப்பதையும் அவர்களது பாவாடைக்குக் கீழிலிருந்தும் காணொளி எடுத்த அந்த மாணவனின் பெயர் பிரண்டன் லீ பிங் சியாங் என்று அக்கல்லூரி வியாழக்கிழமை காலை உறுதி செய்தது.
பெண்களைப் பாலியல் அவமதிப்பு செய்ததாக லீ மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகப் பள்ளியின் கல்வி விவகாரத் தலைவர் பேராசிரியர் ஜெவேன் ராபர்ட்ஸ் தெரிவித்திருக்கிறார். இவ்வாண்டு மார்ச் மாதம் நடந்த அந்தச் சம்பவம் பற்றி கல்லூரி அறிந்த மறுநாளே லீ தற்காலிகமாக அக்கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் பேராசிரியர் ராப்ரட்ஸ் கூறினார்.
26 வயது லீ, தனது திறன்பேசியைக் கொண்டு குறைந்தது நான்கு பெண்களைப் படமெடுத்ததாகக் கூறப்படுகிறது. அவர் 24 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கும் இவ்வாண்டு மார்ச் மாதத்திற்கும் இடையே இந்தக் குற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

