ஆபத்தான முறையில் கட்டடக் கூரைக்குத் தாவிய சிறுவர்கள்

ஆபத்தான முறையில் கட்டடக் கூரைக்குத் தாவிய சிறுவர்கள்

1 mins read
d0eda697-23c5-4dd4-9bdf-5db64e2fb17e
படம்: ஸ்டாம்ப் -

பள்ளிச் சீருடை அணிந்திருந்த சிறுவர்கள் அடுக்குமாடி வீடு ஒன்றிலிருந்து மற்றொரு கட்டடத்தின் கூரைக்குத் தாவியதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் தீயாகப் பரவியுள்ளது.

டிராமிசு என்ற வாசகர், இந்தக் காட்சியைத் தனது அலுவலகச் சன்னலிலிருந்து கண்டதாக ஸ்டாம்ப் செய்தித்தளம் தெரிவித்துள்ளது. அந்தச் சிறுவர்கள் வீவக கட்டடத்திலிருந்து பக்கத்திலுள்ள சிறிய கட்டடத்தின் கூரைக்குத் தாவியதை இந்தக் காணொளி காட்டுகிறது.

"இவர்கள் இப்படி விளையாடுவதைப் பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக இருந்தது," என்றார் டிராமிசு.