பிரிட்டனின் முன்னாள் காலனியான ஹாங்காங்கில் இப்போது நடக்கும் பிரச்சினை காரணமாக அங்கிருந்து சிங்கப்பூருக்குக் கூடினபட்சமாக US$4 பில்லியன் (S$5.54 பில்லியன்) தொகை மாற்றப்பட்டு இருக்கிறது.
கோல்டுமேன் சாச்ஸ் முதலீட்டாளர்கள் குழுமம் இவ்வாறு மதிப்பிடுகிறது. இந்த வட்டாரத்தின் நிதி மையமாக ஹாங்காங் திகழ்கிறது. அதற்கான மாற்று மையமாக சிங்கப்பூர் விளங்குகிறது.
கூடினபட்சமாக US$3 பில்லியன் முதல் US$4 பில்லியன் வரைப்பட்ட ஹாங்காங் டாலர் வைப்புத்தொகை சிங்கப்பூருக்கு இடமாறி இருக்கிறது என்று நியூயார்க்கைத் தளமாகக் கொண்ட அந்த அமைப்பு மதிப்பிடுகிறது.

