சிங்கப்பூர்தான் உலகிலேயே அறிவார்ந்த நகர்

சிங்கப்பூர்தான் உலகிலேயே அறிவார்ந்த நகர்

1 mins read

உலகிலேயே மிகவும் அறிவார்ந்த நகர் சிங்கப்பூர்தான் என்று சுவிட்சர்லாந்தின் வணிகத்துறை பள்ளியான ஐஎம்டியும் சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகமும் வெளியிட்டு உள்ள ஓர் அட்டவணை குறிப்பிடுகிறது. இங்கு வசிக்கும் மக்களைப் பொறுத்த வரையில், உலகிலேயே சிங்கப்பூர்தான் மிகவும் அறிவார்ந்த நகராக இருக்கிறது என்று முதல் முறையாக வெளியிடப் பட்டு உள்ள 'ஐஎம்டி அறிவார்ந்த நகர் அட்டவணை' என்ற அந்த அட்டவணை குறிப்பிட்டு இருக்கிறது.

நகரமய வாழ்க்கை, அதில் தொழில்நுட்பம் காரணமாக ஏற்படக்கூடிய நன்மைகள், நகரமயத்தால் ஏற்படக்கூடிய குறைபாடுகளைத் தொழில்நுட்பங்கள் களையும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் அறிவார்ந்த நகர் அட்டவணை உருவாக்கப்பட்டது.

ஆய்வில் 102 நகர்கள் உள்ளடக்கப்பட்டன. ஒவ்வொரு நகரில் இருந்தும் 120 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் கருத்துகள் சேகரிக்கப்பட்டு ஆய்வறிக்கை உருவாக்கப்பட்டது. முதல் 10 நகர்களில் உள்ள ஆசிய நகரங்களில் சிங்கப்பூர், தைப்பே மட்டும் அடங்கும்.