இணையப் பாதுகாப்புத் துறையில் சேர பெண்களுக்கு திருவாட்டி சிம் அழைப்பு

இணையப் பாதுகாப்புத் துறையில் சேர பெண்களுக்கு திருவாட்டி சிம் அழைப்பு

1 mins read
6691104c-b18a-4f81-86b4-83c6238f9b23
தொடர்பு, தகவல் துணை அமைச்சர் சிம் ஆன். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

இணையப் பாதுகாப்புத் துறையில் திறனாளர் பற்றாக்குறை இருப்பதால் அத்துறையில் தங்கள் வாழ்க்கைத்தொழிலை அமைத்துக்கொள்ள பெண்கள் அதிகளவில் முன்வர வேண்டும் என்று தொடர்பு, தகவல் துணை அமைச்சர் சிம் ஆன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இணையப் பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்புகள் குவிந்துள்ள நிலையில், அனைத்துலக அளவில் அதில் பணியாற்றுவோரில் 10% முதல் 25% வரைதான் பெண்கள் இருப்பதாக திருவாட்டி சிம் ஆன் சுட்டினார்.

பெண்கள் அதிகளவில் இணையப் பாதுகாப்புத் துறையில் சேர்ந்து, செழிப்புற அவர் மூன்று வழிமுறைகளைக் குறிப்பிட்டார். இணையப் பாதுகாப்புத் துறை வேலை வாய்ப்புகள் குறித்து இளையர்களிடம் விழிப்புணர்வை அதிகரிப்பது, அதிவேகமாக வளர்ச்சி கண்டு வரும் அத்துறையில் பெண்கள் தங்களின் திறன்களை மேம்படுத்திக்கொள்வது, வலுவான சமூகக் கட்டமைப்பு இருப்பது ஆகியவையே அம்மூன்று வழிமுறைகள்.