சாலையில் குப்புறக் கவிழ்ந்த கார்

சாலையில் குப்புறக் கவிழ்ந்த கார்

1 mins read

சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று மரத்தின் மீதும் பின் விளக்குக் கம்பத்தின் மீதும் மோதி, தலைகுப்புறக் கவிழ்ந்த சம்பவம் நிக்கல் டிரைவில் நேற்றுக் காலை 8 மணியளவில் நிகழ்ந்தது. அந்த காரை ஓட்டிய 32 வயது ஆடவர் சுய நினைவுடன் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தெலுக் பாக்கு சாலையை நோக்கிச் செல்லும் அந்தச் சாலையில் நிகழ்ந்த இவ்விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்து குறித்து போலிஸ் விசாரித்து வருகிறது.