காதலியிடமிருந்து $52,000 திருடிய ஆடவர் மீது 32 குற்றச்சாட்டுகள்

காதலியிடமிருந்து $52,000 திருடிய ஆடவர் மீது 32 குற்றச்சாட்டுகள்

1 mins read
4e6b67e3-e7c5-4d6e-84de-5f9a8d9d57ad
நோய்வாய்ப்பட்டுள்ள தனது காதலியின் வேதனையை மேலும் அதிகமாக்கியுள்ளார் இந்த ஆடவர். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

நோயுற்ற காதலியைப் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி அவருடைய வீட்டில் குடியேறிய ஆடவர் ஒருவர் அவரிடமிருந்தே ஏடிஎம் அட்டைகளையும் கடன்பற்று அட்டைகளையும் திருடி, அதன் மூலம் கிட்டத்தட்ட $52,000யைக் களவாடினார் என்று நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. கடுமையான தோல் வியாதிக்கு ஆளாகியுள்ள தனது முன்னாள் காதலி குமாரி ஃபெலி ஷியா லீ யென் பெங்கிடம் இருந்து திருடிய 32 குற்றச்சாட்டுகளை மார்கஸ் கோங் வெய் கியோங் (படம்) எதிர்நோக்குகிறார்.

குமாரி லீயின் அனுமதியின்றி அவரது வங்கிக் கணக்கி லிருந்து தனது கணக்குக்குப் பணத்தை மாற்றிய 21 குற்றச்சாட்டுகளும் மார்கஸ் மீது சுமத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற ஆவணங்களில் வயதும் வேலையும் குறிப்பிடப்படாத மார்கஸ், குமாரி லீயின் கணக்கிலிருந்து தனது கணக்குக்குப் பணம் எப்படி மாற்றி விடப்பட்டது என்று போலிஸ் அதிகாரியிடம் பொய் கூறியது தொடர்பிலும் குற்றச்சாட்டப்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு மே மாதத்தில் நோயுற்றிருந்த குமாரி லீயைப் பராமரிப்பதற்காக அவரது வீட்டில் குடியேறியபோது மார்கஸ் திருட்டு நடவடிக்கைகளைப் புரிந்தார் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் எட்வின் சோ நீதிமன்றத்தில் தெரிவித்தார்.