மாதர் சாசனத்தில் கொண்டு வரப்படும் உத்தேச திருத்தங்கள் நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், பாலியல் குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க போலிசுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்படும். மேலும் பாலியல் குற்றங்களுக்கான தண்டனையும் அதிகரிக்கும்.
மாதர் சாசன திருத்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்குத் தாக்கல் செய்யப்பட்டது. மாதர் சாசனம் பெண்களையும் சிறுமிகளையும் தவறாகப் பயன்படுத்துதல், தாக்குதல் ஆகியவற்றுக்கு எதிராகப் பாதுகாக்கிறது. திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், வெளிநாட்டில் இருந்து இணையம் மூலம் சிங்கப்பூரில் உள்ள பாலியல் சேவைகளுக்கு வாடிக்கையாளர் தேடிக்கொடுக்கும் செயலில் ஈடுபடுவோர் மீதும் போலிசார் நடவடிக்கை எடுக்கலாம்.